Last Updated:
2025ஆம் ஆண்டு பொது சேர்க்கை தேர்வில் 99.96 சதவீத மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 120ஆவது இடத்தைப் பிடித்தார்.
வெறும் 21 வயதில், இரண்டரை கோடி ரூபாய் ஊதியத்திற்கான வேலையை பெற்று ஐஐடி மாணவர் அசத்தியுள்ளார்.
IIT ஹைதராபாத்தில் இறுதியாண்டு கணினி அறிவியல் பொறியியல் படிக்கும் 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ், வெளிநாட்டு நிறுவனத்தில் இரண்டரை கோடி ரூபாய் ஆண்டு வருமான தொகுப்பைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த எட்வர்ட், 2022 ஆம் ஆண்டு JEE மெயின்ஸ் மற்றும் அட்வான்ஸில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். 2025ஆம் ஆண்டு பொது சேர்க்கை தேர்வில் 99.96 சதவீத மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 120ஆவது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த சர்வதேச டிரேடிங் நிறுவனமான Optiver, IIT ஹைதராபாத்தில் இருந்து 2 மாத கோடைக்கால பயிற்சிக்கு இருவரை தேர்வு செய்தது.
அதில் ஒருவரான எட்வர்ட்டுக்கு 2 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, 6 வார பணித்திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் எட்வர்ட் தனது திறனை வெளிப்படுத்தியதால், அவருக்கு அந்நிறுவனத்தில் வேலை உறுதி செய்யப்பட்டது. பிளேஸ்மெண்ட்டில் ஆண்டுக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளத்தில் முழு நேர வேலை வழங்கப்பட்டது. வருகிற ஜூலை மாதத்தில் நெதர்லாந்தில் உள்ள இந்நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பணியில் சேரவுள்ளார். இது தான் நேர்காணல் செய்த முதல் மற்றும் ஒரே நிறுவனம் என்று எட்வர்ட் தெரிவித்துள்ளார்.


