தெற்கு ஆப்கானிஸ்தானில் மார்ச் 17 அன்று பயங்கர விபத்து நடந்தது.
ஒரு பேருந்து,எண்ணெய் டேங்கர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீ விபத்துக்குள்ளானது.
துரதிர்ஷ்டவசமாக, 21 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 38 பேரில், 11 பேர் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.மீதம் 27 பேர் சிறிய காயங்களுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கோர விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேர்ந்தது.
ஹெராதிலிருந்து காபூல் நோக்கிச் சென்ற பேருந்து முதலில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.