• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மோதல்: வளைகுடா அரசியலை புரிந்து கொள்வது எப்படி? எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மோதல்: வளைகுடா அரசியலை புரிந்து கொள்வது எப்படி? எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த போருக்கான அடிப்படை காரணம் என்பது மிகப்பெரிய கேள்வி.. இப்படி இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரபு நாடுகள் ஏன் ஒன்றிணையவில்லை என்பது அடுத்த கேள்விக்குறி?.. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நிலைப்பாடின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவின் காரணமாக அந்த மக்கள் சந்திக்க கூடிய சிக்கல் என்ன என்பதும் மிகப்பெரிய கேள்வி. இப்படியான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து இருக்கின்றார் தமிழ் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.

இன்றைக்கு ஒரு மிகப் பதட்டமான சூழல் என்பது உலகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அக்டோபரில் ஹமாஸ் கொடுத்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்க தொடங்கியது என்று சொல்வதா இல்ல அழிக்க தொடங்கியது என்று சொல்வது என்று தெரியவில்லை… ஏறக்குறைய காசா என்ற பகுதி முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து முழுமையான தகவல் இல்லை.

குறிப்பாக, ஒரு 60 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடு மையாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உடல் ஊனமாகி உடலில் பாகங்களை இழந்து இன்றைக்கும் அந்த மக்கள் அங்கே உணவுக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள் இல்லை. ஒரு ஒட்டு மொத்த நாடும் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டது. அங்கே ஐநாவின் நிறுவனங்கள் உள்ளிட்ட எவருக்கும் அனுமதி இல்லை அங்கே வேலை செய்த மருத்துவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் மருத்துவமனைகள் தரை மட்டமாக்கப்பட்டன. ஐநாவின் சார்பாக செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக எல்லாம் வேலை செய்து கொண்டிருந்த உணவு கூடங்கள் அளிக்கப்பட்டு விட்டது. உலக ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் ஏராளமாக அங்கே கொல்லப்பட்டு விட்டார். எந்த ஊடகங்களுக்கும் காசாவில் இருந்து செய்திகளை ஒளிபரப்பு அனுமதியில்லை.

ஒரு போரை இஸ்ரேல் தாந்தோணித்தனமாக, தான் இஷ்டப்படி எல்லா விதிமுறைகளையும் அங்கே வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு 22 லட்சம் பேர் அங்க ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். இது எல்லாம் அக்டோபரில் 2023 இல் தொடங்கியதா என்றால் இல்லை. நாம் வரலாற்றை அறிந்து கொண்டால்தான் அந்த தாக்குதலை பற்றி அறிந்து கொள்ள முடியும். நாம் வரலாற்றை வாசித்தால் ஒழிய இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது.

எப்படி நாசிக்களால் துரத்தடிக்கப்பட்டு பால்போர் ஒப்பந்தத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்கள் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் ஒதுங்க இடமில்லை என்ற பொழுது, அவர்களை பூங்கோத்துக் கொடுத்து எலும்பும் தோலுமாக ஆஸ்ட் ஹாஸ்ட் விச் கேம்பில் இருந்து தப்பி வந்தவர்களை பூங்கொத்துகளை கொடுத்து கப்பல் கப்பலாக இருக்க இடம் கொடுத்து, அவர்களை இறக்கிய அந்த காட்சிகள் இன்றும் இணையத்தில் ஏராளமாக ஆவணப் படங்களில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் இன்றைக்கு எப்படி பாலஸ்தீன என்கிற ஒரு பெரிய நாடு இருந்தது 1948 ஆண்டு 15ஆம் தேதி இஸ்ரேல் தன்னை ஒரு நாடாக அறிவித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முழு அப்பத்தையும் பறித்துக் கொண்டு கடுகளவு ,மிளகு அளவு சிறிய நிலங்களை மட்டும் பாலஸ்தீனமாக வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்கிரமித்த வண்ணமாக இருக்கின்றது.

உலகளாவிய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இப்பொழுது அங்கே ஒரு 60 ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் என்று நாம் பேசிக் கொண்டிருக்க கூடிய அதே நேரம் அமெரிக்கா உடைய ஹார்வாட் பல்கலைக்கழகம் ஏறக்குறைய அங்கே 3 லட்சம் பேர் கிட்ட இதுவரை இந்த போரினால் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகளை வெளியிட்டு இருக்கின்றது. உலகம் முழுவதிலும் இருக்கக்கூடியவர்கள், போர்கள் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் அனைவரும் இஸ்ரேலினுடைய போக்குகளை பற்றி தொடர்ந்து விமர்சித்துக் கொண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்து இருக்கக் கூடாது என்று மிக உறுதியாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி கென்னடி எவ்வாறு கொல்லப்பட்டார் என்கிற விஷயங்கள் எல்லாம் இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்படி இஸ்ரேல் தொடர்ச்சியாக தான்தோன்றித்தனமாக செயல்படக் கூடிய ஒரு நாடு. குறிப்பாக அணு உலைகள் தொடர்பான கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் எதற்குள்ளும் இஸ்ரேல் இல்லை. ஆனால் ஈரான் எல்லா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. ஈரான் எல்லா இன்ஸ்பெக்டர் தன் நாட்டுக்குள்ள அனுமதிக்கின்றது. ஆனால் இதுவரை அவ்வாறான ஒப்பந்தங்களில் இதுவரை இஸ்ரேல் கையெழுத்து இட வில்லை. எந்த ஒரு இன்ஸ்பெக்டர்களையும் தன்னுடைய நாட்டுக்குள்ளேயே அனுமதிக்காத ஒரு நாடு இஸ்ரேல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலிருந்து ஈரானுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் அனைவருமே ஈரானிடம் அணு உலைகளை அணு ஆயுதங்களை உருவாக்க தேவையான கச்சா பொருட்களிலெல்லாம் இன்றைக்கும் இல்லை என்றுதான் தெரிவிக்கின்றார்கள்.

அதேசமயம் அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் உளவு பிரிவின் தலைவர் துளசி கப்பாா்ட் ஈரானிடம் எந்த விதமான அணு ஆயுதங்களும் இல்லை என்பதை அவரும் அறிவித்தார். இவ்வாறு உலகின் தலைசிறந்த பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஈரானுக்கு சர்டிபிகேட் வழங்கிக் கொண்டிருக்கும் அதே நேரம், தனது சொந்த நாட்டு நிறுவனங்கள் சொல்வதை மறுதலித்து விட்டு இஸ்ரேல் தாந்தோணித்தனமாக சென்று ஈரானில் பல தாக்குதலை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேல் கடைசியாக பாலஸ்தீனை அழித்து ஒழிக்க கூடிய அதே நேரம் ஈரானில் தெவரானுக்கு சென்று தெகரானில் இருக்கக்கூடிய சில இடங்களுக்குச் சென்று தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து யுத்தம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதற்கு அடுத்தபடியாக பதிலடியை வெளிப்படையாக ஈரான் கொடுக்க தொடங்கியது. ஈரான் இப்படி வந்து தன்னை தாக்கும் என்று இஸ்ரேல் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் ஈரான் அப்படி வந்து தாக்கியது தொடர்ந்து இஸ்ரேல் தாக்க பிடிக்க முடியாமல் அமெரிக்காவிடமிருந்து கெஞ்சி எங்களுக்காக தாக்குதலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிலையில், ட்ரம்பும் தலையாய கடமைகளை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு காங்கிரஸில் கூட ஒரு கலந்துரையாடல் செய்யாமல் தன்னுடைய ஆற்றலை பயன்படுத்திக் கொண்டு ஈரானை கடுமையாக தாக்கினார். இதனால் ஈரானும் அமெரிக்க தளங்களை தாக்க முயன்றது. ஆகவே இதில் ஜனநாயகப்பூர்வமான நாடு என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகின்றது.

இப்பொழுதும், என்னை பொறுத்தவரை அழுத்தமாக, கட்டாயமாக போர் என்பதை வேண்டாம் என்று நினைப்பவன் நான். எல்லா வகையான போவார்களையும் வேண்டாம் என்று சொல்கிறோம். இன்றைக்கு உலகம் முழுக்க இவ்வளவு ஏழ்மை இருக்கிற நேரம் இவ்வளவு மக்கள் உணவுக்கே கஷ்டப்படுகிறவர்கள். ஐநா சபை என்கிற நிறுவனங்கள் எல்லாம் அதற்குத்தான் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய ஏழ்மை மற்றும் வறுமையை ஒழிக்க வேண்டும். இன்றைக்கு நாம் நோய்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம். உலகமே அடிப்படை வசதிகளுக்காக இன்றே இன்னும் நாம் ஒரு சமநிலையை எட்டாத நேரம் போர் என்ற ஒற்றை விஷயத்திற்காக பெரிய பெரிய நாடுகளின் பட்ஜெட் தொகைகளை இழந்து வருகின்றோம்.

இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா செய்திருக்கக் கூடிய போர்கள் அனைத்துமே பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து விட்டு அங்கு அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றார்கள். அப்படி பார்க்கும் பொழுது அமெரிக்காவிற்கும் இத்தனை போர்களில் பங்கேற்க கூடிய பொருளாதாரங்கள் ஏதுமில்லை. ட்ரம்ப்பும் தொடர்ச்சியாக பல்வேறு போர்களை பங்கேற்று அமெரிக்க பொருளாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றது. போர்களையெல்லாம் நிறுத்த வேண்டும் என்றால் என்னை ஜனாதிபதியாக என்று கூறினார். ஆனால் அவர் வந்தே போரை தொடங்கி இருப்பது மிகவும் துதிர்ஷ்டவசமானது.

ஆகையால் மிகப்பெரிய அமைதி ஏற்பட வேண்டும் ஈரானிலும் இஸ்ரேலும் மட்டும் போர் நின்றுவிட்டால் போதாது பாலஸ்தீனத்திலும் போர் நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக அரபு உலக நாடுகள் பாலஸ்தீன தேசம் இருப்பதற்கான சாத்தியங்களை முனைந்து ஏற்படுத்தித் தர வேண்டும். அரபு நாடுகள் மட்டும் ஏதோ பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருந்தால் அவர்கள் ஏதோ மிகப்பெரிய பகல் கனவை கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அரபு நாடுகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்குதலில் மாட்டிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து கொண்டு அமைதிக்கு வழி வகுக்க வேண்டும். அமைதியை நோக்கி பாலஸ்தீன மக்களை கொண்டு வர ஒவ்வொரு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 09, 2025 8:35 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மோதல்: வளைகுடா அரசியலை புரிந்து கொள்வது எப்படி? எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்

Read More

Previous Post

விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் உற்பத்தி குறைப்பு: 1 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பா? | Production Reduce of Free Dhoti and Saree Scheme: Workers Affect

Next Post

குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 3 பேர் பலியான சோகம் | Makkal Osai

Next Post
குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 3 பேர் பலியான சோகம் | Makkal Osai

குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - 3 பேர் பலியான சோகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin