இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள காலக்கட்டத்தில், எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்க்கை நடத்த அந்தப் பணம் போதாத நிலைதான் உள்ளது. இந்த நிலையில், 2040ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் மதிப்பு எவ்வளவு இருக்கும்? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பணவீக்கம், பொருளாதாரக் கொள்கைகள், வாழ்க்கைச் செலவு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் போன்ற காரணிகள் இதைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், 2040ஆம் ஆண்டு, ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று தற்போது விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.


