Last Updated:
சுமார் 50 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்த விண்கல் காட்சியளிக்கிறது. இந்த கல் அதிவேகத்தில் பூமி மீது விழும்போது மும்பை போன்ற பெரிய நகரங்களையே அழிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும் என கருதப்பட்டது.
கடந்த சில நாட்களாக பூமியை வரும் 2032 ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கும் என தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் தற்போது இந்த விண்கல்லால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
2024 YR 4 என இந்த விண்கல்லுக்கு அறிவியலாளர்கள் பெயர் வைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முன்பாக இந்த விண்கல் தாக்குதல் நடத்துவதற்கு 1.3 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறினர். இந்த சதவீதம் ஜனவரி மாதத்திற்கு பின்னர் 3.1 ஆக அதிகரித்தது.
அடுத்து வரும் நாட்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் YR 4 விண்கல் பூமி மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாக அறிவியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 50 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்த விண்கல் காட்சியளிக்கிறது. இந்த கல் அதிவேகத்தில் பூமி மீது விழும்போது மும்பை போன்ற பெரிய நகரங்களையே அழிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும் என கருதப்பட்டது. இந்த விண்கல்லுடைய பாதையை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க – இந்தியாவின் ஒரு ரூபாயை பாகிஸ்தானில் கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
அதில் சிறிய அளவிலான பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனால் உலகில் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாது என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த விண்கல்லுடைய தாக்குதல் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும், கடந்த கால தகவலின் படி விண்கற்கள் தாக்குதலால் உயிர் இழந்தவர்கள் யாரும் கிடையாது என தெரிய வந்துள்ளது.
February 24, 2025 7:49 PM IST


