• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்; 10 பில்லியன் டொலர் வருமானம் – ஜனாதிபதி அநுர தலைமையில் முக்கிய கலந்துரையாடல்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்; 10 பில்லியன் டொலர் வருமானம் – ஜனாதிபதி அநுர தலைமையில் முக்கிய கலந்துரையாடல்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்; 10 பில்லியன் டொலர் வருமானம் – ஜனாதிபதி அநுர தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!

2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு. ஜனாதிபதி அநுர தலைமையில் விமான சேவைகள், சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஆலோசனை.


இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்து, 2030ஆம் ஆண்டுக்குள் வருடாந்தம் 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதுடன், 10 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தை ஈட்டுவதை இலக்காகக் கொண்டு முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் பிரபலப்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, சிகிரியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இலகுவாகப் பயணிப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் புதிதாக 10 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பித்துள்ளதாகச் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தேசிய பூங்காக்களை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது வன வளங்களையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச சுற்றுலாத் தலமாகப் பிரபலப்படுத்தும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் உலகளாவிய விளம்பர மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் இயங்கிவரும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கும் நிறுவனங்களையும் முறையான சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிட சேவை வழங்குநர்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக மாற்றுவதே இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை மீறி வெளிநாட்டுப் பிரஜைகளால் நடத்தப்படும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், சட்டபூர்வமான வர்த்தகச் செயற்பாடுகளையும் இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

சபா மற்றும் சரவாக் கிராமப்புற சாலைத் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யவில்லை – Malaysiakini

Next Post

நேருக்கு நேர் மோதிக்கொண்ட.. அதிவேக ரயில்கள்! அடையாளம் தெரியாமல் சிதைந்த 46 பேர்! பெரும் சோகம்! | Spain Train Crash: 46 Killed as High Speed Trains Collide Head On Near Toledo, Nation in Shock

Next Post
நேருக்கு நேர் மோதிக்கொண்ட.. அதிவேக ரயில்கள்! அடையாளம் தெரியாமல் சிதைந்த 46 பேர்! பெரும் சோகம்! | Spain Train Crash: 46 Killed as High Speed Trains Collide Head On Near Toledo, Nation in Shock

நேருக்கு நேர் மோதிக்கொண்ட.. அதிவேக ரயில்கள்! அடையாளம் தெரியாமல் சிதைந்த 46 பேர்! பெரும் சோகம்! | Spain Train Crash: 46 Killed as High Speed Trains Collide Head On Near Toledo, Nation in Shock

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin