Last Updated:
எலான் மஸ்க் அறிவிப்பின் படி, ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் அடுத்தாண்டு இறுதியில் செவ்வாயில் தரையிறங்கும். 2029ல் மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்துச் செல்ல திட்டம்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம், அடுத்தாண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 23-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. தற்போது அதன் 23வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தான் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்டார்ஷிப் விண்கலம் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. இதனால், ஸ்பேக்ஸ் எக்ஸ் இன் ஸ்டார்ஷிப் என்ற விண்கலம் அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆப்டிமஸ் என்ற ரோபோவும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணம் செய்யும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஸ்டார்ஷிப் வெற்றிகரமாக அடுத்தாண்டு தரையிறங்கினால், 2029-இல் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
March 16, 2025 9:15 AM IST


