அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பாஜகவின் நிலைப்பாட்டால், ஆர்எஸ்எஸ்ஸுடனான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் வரையறை. அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் (பாஜக) இந்தாண்டுடன் 75 வயதாகவுள்ளது. ஆகையால், அவர்கள் இருவரும் ஓய்வுபெறுவார்களா? என்ற கேள்வி எழுவதற்கு முன்னதாகவே, தனது ஓய்வை மோகன் பகவத் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், பிரதமர் மோடியின் ஓய்வுகுறித்து எதுவும் இன்னும் எட்டப்படவில்லை. இதனிடையே, ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், அரசியல் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்மூலம், பிரதமர் மோடியைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருத்துகள் நிலவின.

