Last Updated:
2027 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 அணிகள், இரண்டு பிரிவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து சேரும் புதிய திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2027 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை தென்னாப்பிரிக்கா இந்த தொடரை வென்றது. இந்நிலையில், நடப்பு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான செயல்பாடு, கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைவு உள்ளிட்ட காரணங்களை அடுத்து 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளையும் அனுமதிப்பது குறித்து ஐசிசிக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் ரோஜர் டோஸ் தலைமையிலான செயற்குழு பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள நடைமுறை போல் இல்லாமல் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு தொடரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலக கோப்பையுடன் நிறுத்தப்பட்ட ஒருநாள் சூப்பர் லீக் தொடரை மீண்டும் தொடங்குவது குறித்தும் செயற்குழு பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 12, 2025 10:53 AM IST


