Last Updated:
விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சாம்பியன் வீரர்கள். இருவரையும் நாம் என்றைக்கும் குறைத்து மதிப்பிட முடியாது
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.
முதல் போட்டியில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை அளித்தார்கள். குறிப்பாக விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரோஹித் சர்மா 8 ரன்கள் எடுத்தார். இதனால் இரு வீரர்களின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள சூழலில், இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை கைப்பற்ற முடியும். இத்தகைய சூழலில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் அடிலைடில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி ரோஹித் சர்மாவும் உலகக்கோப்பை 2027 நடைபெற உள்ள உலக கோப்பை தொடர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் இருவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருடன் ஓய்வு அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரின் ஆட்டம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சாம்பியன் வீரர்கள். இருவரையும் நாம் என்றைக்கும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி தான் சிறந்த வீரர் என்று நான் கூறுவேன்.
October 21, 2025 3:45 PM IST