Last Updated:
ரேந்திர மோடி தலைமையில், டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்முறையாக டிஜிட்டல் முறையில் 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்த உள்ளதாக கூறினார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குடியிருப்புகளை பட்டியிலிடவும், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணியை நடத்தவும் என இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினின் வைஷ்ணவ் கூறினார். மேலும், நிலக்கரி சுரங்க ஒப்பந்தங்களில் உள்நாட்டு தனியார் வர்த்தகர்களும் ஈடுபடும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
December 13, 2025 7:51 AM IST


