• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகளாவிய வான்வழிப் போக்குவரத்துத் துறை 2026ஆம் ஆண்டில் பாரிய விரிவாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தநிலையில், சவூதி அரேபியா, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் விமான நிலையக் கட்டமைப்பு மற்றும் புதிய வழித்தடங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், சவூதி அரேபியாவின் கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் (JED) தனது மெகா விரிவாக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.  

விமான நிலையம் 



2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 114 மில்லியன் பயணிகளைக் கையாளும் இலக்குடன், சுமார் 115 பில்லியன் சவூதி ரியால் மதிப்பிலான இத்திட்டம் “விஷன் 2030” இன் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

இதன் முதற்கட்டமாக, 2026ஆம் ஆண்டிற்குள் முனையம் 1-இன் கொள்ளளவு 15 மில்லியனால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, ஏர் பிரான்ஸ் – கே.எல்.எம் (Air France-KLM) குழுமம் ஆசியாவிற்கான தனது சேவைகளை மறுசீரமைத்து வருகிறது.  

விமானச் சேவைகள் 

இதனடிப்படையில், 2026 மே முதல் பாரிஸ் – மணிலா இடையிலான நேரடி விமானச் சேவைகள் பருவகாலச் சேவையாக (Seasonal) மாற்றப்படவுள்ளதுடன், பேங்காக் மற்றும் பூக்கெட் போன்ற அதிக கேள்வி நிலவும் ஆசிய வழித்தடங்களில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

அத்தோடு, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA), 2026ஆம் நிதியாண்டிற்காக 2.89 பில்லியன் டொலர் நிதியை விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதில் முனையங்களை நவீனப்படுத்துவதற்காக மட்டும் ஒரு பில்லியன் டொலர் போட்டித்தன்மையுடனான மானியமாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவு 


தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாமின் லாங் தான் (Long Thanh) சர்வதேச விமான நிலையம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனது செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அத்தோடு, வடக்கு வியட்நாமில் கியா பின் (Gia Binh) சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

இத்தகைய திட்டங்கள் மூலம் 2026-இல் 95 மில்லியன் பயணிகளைக் கையாள வியட்நாம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


வான்வழிப் போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் ஊடுருவல் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதுடன், பாதுகாப்பான பயணச் சூழலை உறுதிப்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

“கோவில் விவகாரங்களில் பிரதமர் நியாயமான பரிசீலனையை வழங்க வேண்டும் என்று இந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.” – Malaysiakini

Next Post

நில உரிமைகள் இல்லாத வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோத கட்டமைப்புகளாகக் கருதப்படக்கூடாது: ஙா கோர் மிங் | Makkal Osai

Next Post
நில உரிமைகள் இல்லாத வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோத கட்டமைப்புகளாகக் கருதப்படக்கூடாது: ஙா கோர் மிங் | Makkal Osai

நில உரிமைகள் இல்லாத வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோத கட்டமைப்புகளாகக் கருதப்படக்கூடாது: ஙா கோர் மிங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin