புதிய கல்வி சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் 2025ல் நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து 6 உப குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்விச் சீர்திருத்தம், பாடசாலைகளில் மனித வளம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை, பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கல்வி சபை, உயர்கல்விப் பிரிவு, திறன் கல்விப் பிரிவு ஆகியவற்றுக்கு ஆலோசனைக் குழுவுடன் இணைந்த 6 துணைக் குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.