Last Updated:
வழக்கமாக தோனி 8 அல்லது 7-வது ஆட்டக்காரராக பேட்டிங்கில் களம் இறங்குவார்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ். தோனிக்கு புதிய ரோல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சென்னை அணி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது இளம் வீரர்கள் அணியில் அதிகம் உள்ள சூழலில், இந்த முறை கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
மேலும், இந்த கிரிக்கெட் தொடருடன் எம்.எஸ். தோனி விடை பெறுவார் என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோப்பையுடன் ஐபிஎல் தொடரை விட்டு செல்வாரா என்கிற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
வழக்கமாக தோனி 8 அல்லது 7-வது ஆட்டக்காரராக பேட்டிங்கில் களம் இறங்குவார். பினிஷர் ஆக மட்டுமே அவர் அறியப்பட்டுள்ள சூழலில், வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி களம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, பவர் ப்ளே ஓவர்களில் மூன்றாவது வீரராக அவர் களமிறங்கி விளையாடினால், குறுகிய நேரத்தில் அதிக ரன்களை எடுக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


