பனையூர் டூ பரந்தூர் அரசியல்
விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் விஜயின் பேச்சில் வீரியம் குறையாமல் இருந்தது. தொடர்ந்து, அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டு அந்த சந்திப்பும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை மீண்டும் ஒருமுறை சீண்டியிருந்தார். “அரிட்டாப்பட்டில உங்களோட நிலைப்பாடை பாராட்டுறேன். அரிட்டாப்பட்டி மக்களை மாதிரிதான பரந்தூர் மக்களும், என விஜய் பேசியதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. ‘நம்புற மாதிரி நாடகம் ஆடுறதுல நீங்கதான் கில்லாடியச்சே..’ என பேசி தனது திமுக எதிர்ப்பை இன்னும் வலுவாக பதிய வைத்தார்.

