Last Updated:
122 பில்லியன் டாலர் என்பது காப்பீடு செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு மட்டுமே என்பதால், உண்மையான இழப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்
நடப்பு ஆண்டில் இயற்கை சீற்றம் மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக ரூ. 10 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2025-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி மற்றும் புயல்கள் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உலகப் பொருளாதாரத்திற்குப் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘கிறிஸ்டியன் எய்ட்’ (Christian Aid) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்த ஆண்டில் ஏற்பட்ட 10 மிக மோசமான காலநிலை நிகழ்வுகளால் மட்டும் சுமார் 122 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 10.24 லட்சம் கோடி ஆகும்.
இதில் மிக அதிகபட்சமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மட்டும் ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் புயல் மற்றும் வெள்ளத்தால் சுமார் ரூ. 2 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பருவமழை வெள்ளத்தினால் சுமார் ரூ. 50,400 கோடி நிதியிழப்பு ஏற்பட்டதோடு, 1,800-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த 122 பில்லியன் டாலர் என்பது காப்பீடு செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு மட்டுமே என்பதால், உண்மையான இழப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலே இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களுக்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.


