2025-ஆம் ஆண்டுக்கான SPM மீண்டும் எழுதும் தேர்வை, நாடு முழுவதும் உள்ள 186 தேர்வு மையங்களில், மொத்தம் 10,049 மாணவர்கள் ஜூலை 15 முதல் 17 வரை எழுத உள்ளனர் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வு மலாய் மொழி, வரலாறு, கணிதம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளை உள்ளடக்கியதாகும், இவற்றுள் மலாய் மொழி எழுத்து தேர்வு, செவிமடுத்தல், மற்றும் வாய்மொழி தேர்வுகளும் அடங்கும்.
மாணவர்கள், தேர்வு குறித்த முழுமையான தகவல்களைதேதி, நேரம், தேர்வுக் கோட், காகித வகை மற்றும் அறிவுறுத்தல்களை https://sppat.moe.gov.my இணையதளம் வலி பெறலாம்.
மாணவர்கள், தங்களின் அடையாள ஆவணத்துடன் தேர்வுக்கு பதிவு செய்தமைக்கு உறுதி அளிக்கும் Pernyataan Pendaftaran Peperiksaan ஆவணத்தையும் கொண்டு செல்ல வேண்டும். இது sppat.moe.gov.my இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. .
அனைத்து தேர்வாளர்களும் முன்னதாக அறிவிக்கப்பட்ட செயல்முறை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில் எழுதி சிறந்த முடிவுகளைப் பெற கல்வி அமைச்சகம் என வாழ்த்துகிறது அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது