S Pass: சிங்கப்பூரில் எஸ் பாஸ் அனுமதி அட்டைக்கான தகுதி சம்பளம் உயரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தற்போது S$3,150 வெள்ளி என இருக்கும் எஸ் பாஸ் தகுதி சம்பளம் S$3,300 க்கு உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து முதல் படிநிலை தீர்வையும் (Tier 1 S Pass levy) S$550 லிருந்து S$650 ஆக அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.
இந்த தகுதி சம்பளமானது 45 வயது அதற்கு மேற்பட்டோருக்கு S$4,650 லிருந்து S$4,800 ஆக உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த புதிய மாற்றங்கள் 2025 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். முன்னர் 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல, S பாஸ் தகுதி சம்பள உச்சவரம்பு மூன்றாவது முறையாக அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதிச் சேவைகள் துறை (Financial Services)
நிதிச் சேவைகள் துறையை பொறுத்தவரை, S Pass தகுதி சம்பளம் S$3,650 லிருந்து S$3,800 க்கு அதிகரிக்கப்படும். இது படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு S$5,650 வரை உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய S Pass விண்ணப்பங்கள்
பொதுத் துறை (General sectors) ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் S$3,300 ஆகவும், நிதிச் சேவை துறைகளுக்கு S$3,800 ஆகவும் உயர்த்தப்படும். இது 2025 செப்டம்பர் 1, முதல் நடைமுறைக்கு வரும்.
S Pass புதுப்பித்தல் (S Pass Renewals)
இந்த சம்பள மாற்றங்கள் எஸ் பாஸ் புதுப்பித்தல்களுக்கும் பொருந்தும். ஆனால் எஸ் பாஸ் புதுப்பிப்பு செய்யும் ஊழியர்களுக்கு 2026 செப்டம்பர் 1, முதல் மட்டுமே இந்த மாற்றங்கள் நடப்புக்கு வரும்.
EP அனுமதி தகுதி சம்பளம்
EP (Employment pass) அனுமதி அட்டையில் உள்ள ஊழியர்களுக்கு தகுதி சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது கூடுதல் தகவல். 2025 ஜனவரி மாதம் முதல் EP தகுதி சம்பளம் S$5,000 லிருந்து S$5,600க்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலை அனுமதி அட்டைகள், சம்பளம், வேலை வாய்ப்பு போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள t.me/tamildailysg டெலிக்ராம் குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு
The post 2025ல் S Pass அனுமதியில் புதிதாக சிங்கப்பூர் வருபவரா / இங்கு வேலை செய்பவரா? – வேலை, சம்பளம் தொடர்பான முக்கிய அப்டேட் appeared first on Tamil Daily Singapore.

