உலகப் பொருளாதாரம் மந்த நிலைகளுக்கு மேல் நிலைபெறுவதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. எனினும், வளர்ச்சி விகிதங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறி வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் (IMF), அதன் ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், உலகளாவிய வளர்ச்சி மீதான கணிப்புகள் குறைவதை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி மாத முன்னறிவிப்புடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டிற்கான முன்னறிவிப்பு 0.5 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டு 2.8 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டிற்கான முன்னறிவிப்பு 0.3 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதமாகவும் உள்ளது.
பொருளாதாரத்தின் இந்த மந்தநிலைக்கு அமெரிக்கா விதித்த வரிகள், அதிகரித்து வரும் வர்த்தக போர்களால் உருவாகியுள்ள பதட்டங்கள் மற்றும் கொள்கைகளில் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற முக்கிய காரணிகள் தான் காரணம் என்று அறிக்கை கூறுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய ஆண்டின் கணிப்பை விட 0.9 சதவீத புள்ளிகள் குறைந்து, 1.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரிவுக்கு, தொடர்ச்சியான வர்த்தக மோதல்கள் மற்றும் தேவை அதிகரிப்பால் ஏற்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், உலகின் முதல் 10 வலிமையான பொருளாதார நாடுகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் 6.5 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாகவும், 2026 இல் 6.3 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் நிலையான வளர்ச்சி தனியார் நுகர்வு, குறிப்பாக கிராமப்புறங்களில் ஆதரிக்கப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாக இருக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. 2025-26 நிதியாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது, இது முந்தைய கணிப்பான 6.7 சதவீதத்திலிருந்து சற்று குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
April 30, 2025 7:19 PM IST

