Last Updated:
மதிப்பு அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25ஆம் ஆண்டில் 22% அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த 2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியா கிட்டத்தட்ட ரூ.1.61 லட்சம் கோடி மதிப்புள்ள 16 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்துள்ளதாக தொழில்துறை அமைப்பான SEA தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை SEA வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24ஆம் ஆண்டில், இவை 15.96 மில்லியன் டன்களாகப் பதிவாகியுள்ளன. மதிப்பு அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25ஆம் ஆண்டில் 22% அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது.
சர்வதேச விலைகள் உயர்ந்துள்ளதால் சமையல் எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நமது நாடு இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து சோயாபீன் எண்ணெயையும் இறக்குமதி செய்கிறது.
விநியோகத்திற்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, இந்தியா 1990 முதல் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆரம்பத்தில், இந்த இறக்குமதிகளின் மதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில் (2004-05 முதல் 2024-25 வரை), இறக்குமதியின் அளவு 2.2 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செலவுகள் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்துள்ளது என்று SEA விளக்கியது.
2024-25ஆம் ஆண்டில், 16 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா கிட்டத்தட்ட ரூ.1.61 லட்சம் கோடி (USD 18.3 பில்லியன்) செலவிட வேண்டியிருந்தது என்றும் SEA கூறியிருந்தது. அளவின் அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2022-23ஆம் ஆண்டில் 16.47 மில்லியன் டன்களாகவும், 2021-22 ஆம் ஆண்டில் 14.03 மில்லியன் டன்களாகவும், 2020-21 சந்தைப்படுத்தல் ஆண்டில் 13.13 மில்லியன் டன்களாகவும் இருந்தது.
SEA டேட்டாக்களின்படி, 2024-25 எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டில், 17,37,228 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்பட்டன, அதே நேரத்தில் முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 19,31,254 டன்களாக இருந்தது.
November 18, 2025 12:32 PM IST
2024-25ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்வு…! அறிக்கையில் வெளியான தகவல்…


