இந்திய அரசாங்கத்தால் இயக்கப்பட்டு உலக அளவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாக திகழும் இந்தியன் ரயில்வே தினமும் லட்சக்கணக்கான பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்வதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எல்லா இடங்களுக்கும் ரயில்வே சேவைகள் மற்றும் திறமையான செயல்பாடுகளுடன் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு போக்குவரத்தாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரயிலில் தூய்மை மற்றும் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியன் ரயில்வே தீவிரமான விதிமுறைகளை பின்பற்றுகிறது.
இந்தியன் ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியான அமித் குமார் வர்த்தக துறையினரால் தற்போது நடந்து வரும் பரிசோதனைகள் பற்றிய ஒரு சில தகவல்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பரிசோதனையானது டிக்கெட் தொடர்பான விதிமுறைகள் மற்றும் ரயிலில் எச்சில் உமிழ்வது போன்ற தவறுகளுக்கு அபராதங்களை பயணிகளிடமிருந்து வசூல் செய்வதில் கவனம் செலுத்துகிறது. 2023–24 நிதியாண்டில் கிட்டத்தட்ட 12 லட்சம் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், தவறான டிக்கெட்டுடன் பயணித்தவர்கள், புக்கிங் செய்யாமல் லக்கேஜ் எடுத்து வந்தவர்கள் மற்றும் ரயில்கள் மற்றும் ஸ்டேஷன்களில் எச்சில் துப்பியவர்கள் போன்ற நபர்களிடமிருந்து அபராதங்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நபர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த அபராத தொகை 82.6 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த 12 லட்சம் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களில் தோராயமாக 15,963 நபர்கள் தாங்கள் பயணம் செய்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் எச்சில் உமிழ்ந்ததற்காகவும், குப்பைகளை வீசியதற்காகவும் அபராதங்களை செலுத்தி உள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக 18.33 லட்ச ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 லட்சம் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணித்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் அவர்களிடமிருந்து மொத்தமாக 50.79 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 6 பயணிகள் தவறான டிக்கெட்களுடன் பயணித்தது அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தமாக 31.53 லட்ச ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. மேலும் புக்கிங் செய்யாமல் லக்கேஜ் எடுத்து வந்த 7161 பயணிகளிடமிருந்து 11.83 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமலோ அல்லது தவறான டிக்கெட் உடன் பயணிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக இந்தியன் ரயில்வே விதிமுறைகள் குறிப்பிடுகிறது. இதுபோன்ற விஷயங்களின் கீழ் பிடிபடுபவர்கள் இந்திய ரயில்வே விதியின் கீழ் அபராதங்களை செலுத்த நேரிடலாம் அல்லது சிறைக்கு தண்டனை அனுபவிக்கலாம் அல்லது இரண்டு தண்டனைக்கும் ஆளாகலாம்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
அதே நேரத்தில் அதன் விரிவான நெட்வொர்க்கில் சுத்தம் பராமரிக்கப்படுவதற்காகவே ஒரு சில விதிகள் மற்றும் நிபந்தனைகளை இந்திய ரயில்வே விதித்துள்ளது. இது போன்ற தீவிரமான விதிகள் மற்றும் அபராதங்கள் மூலமாக பயணிகளுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் அமைதியான பயண அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே முனைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
