10 அணிகள் பங்கேற்கும் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10 அணிகள் பங்கேற்கும் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஹர்பஜன் சிங்
என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை என்பது அழுத்தங்கள் நிறைந்த தொடர். இதில் வெற்றி வாய்ப்பு உள்ள மூன்று அணிகளை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் அது இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவாக இருக்கும். இந்த மூன்று அணிகளும் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
கங்குலி
நான் மூன்று அணிகளை விட நான்கு அணிகளை தேர்வு செய்கிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுக்குமே உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேத்யூ ஹைடன்
உலகக்கோப்பையில் வெல்ல பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தையும் நம் தள்ளிவிட முடியாது. அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் சாம்பியன்ஷிப் தொடரில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
கவாஸ்கர்
இந்தியாவுக்கு உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இல்லை. எனக்கு தெரிந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கோப்பையை இம்முறை கைப்பற்றும்.