
அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில், விநியோகிக்கப்படாத 2,065 சாதாரண கடிதங்களும், 15 பதிவு செய்யப்பட்ட கடிதங்களும் (registered letters) கண்டெடுக்கப்பட்டன.
பதுளை, ஹல்தும்முல்ல, சொராகுனே தபால் நிலையத்தில் பணிபுரியும் தபால் ஊழியர் ஒருவர், பணியின் போது மது அருந்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில், விநியோகிக்கப்படாத 2,065 சாதாரண கடிதங்களும், 15 பதிவு செய்யப்பட்ட கடிதங்களும் (registered letters) கண்டெடுக்கப்பட்டன.
குறித்த தபால் ஊழியர், 2021ஆம் ஆண்டு முதல் கடிதங்களை விநியோகிக்காமல் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

