• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2020 தாக்​குதலின் மர்​மம் வில​க​வில்லை: அணு விஞ்​ஞானி மொசென் படு​கொலையை மறக்க முடி​யாத ஈரான் மக்கள் | mystery not solved Iran people remember nuclear scientist Mohsen assassination

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
2020 தாக்​குதலின் மர்​மம் வில​க​வில்லை: அணு விஞ்​ஞானி மொசென் படு​கொலையை மறக்க முடி​யாத ஈரான் மக்கள் | mystery not solved Iran people remember nuclear scientist Mohsen assassination
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்​ரேல் தாக்​குதலில் முக்​கிய அணுசக்தி விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்ட நிலை​யில், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதே கொல்​லப்​பட்ட விதத்தை ஈரான் மக்​கள் இன்​னும் மறக்​காமல் உள்​ளனர்.

ஈரான் அணுஆ​யுத தயாரிப்​பில் ஈடு​படு​வதை அமெரிக்​கா, இஸ்​ரேல் போன்ற நாடு​கள் விரும்​ப​வில்​லை. அதனால் கடந்த 2000-ம் ஆண்​டுக்கு முன்​பிருந்தே ஈரானுக்கு பல்​வேறு நெருக்​கடிகளை அமெரிக்கா கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேலும் தன் பங்​குக்கு அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. தற்​போது ஈரான் – இஸ்​ரேல் மோதல் உச்ச கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. கடந்த வாரம் இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் முக்​கிய ராணுவ தளப​தி​கள், அணு விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்​டனர். அவர்​களில் முக்​கிய​மானவர் பெரீட​வுன் அப்​பாஸி. இவர் ஈரான் அணுசக்தி அமைப்​பின் முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர்.

ஈரானின் அணுசக்தி துறை​யில் முக்​கிய​மானவ​ராக இருந்​த​தால், எந்த நேரத்​தி​லும் கொல்​லப்​படலாம் என்று அவரை எச்​சரித்​தனர். அதை கேட்டு அவர் சிரித்​துள்ளார். அத்​துடன், “அணு ஆ​யுதம் தயாரிக்க என்னை ஈரான் அரசு கேட்​டுக் கொண்​டால், மகிழ்ச்​சி​யுடன் தயாரிப்​பேன்” என்று அவர் கூறிய வார்த்தை மிக​வும் பிரபலமானது. எல்​லோரும் எதிர்​பார்த்​தது போல​வே, கடந்த 2010-ம் ஆண்டு அப்​பாஸியை கொல்ல முயற்சி நடந்​தது. அப்​போது அவர் தப்பி விட்​டார். ஆனால், இந்த முறை இஸ்​ரேல் ஏவு​கணை தாக்​குதலில் உயி​ரிழந்​துள்​ளார். இவரது மரணம் தற்​போது விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதே படு​கொலையை மீண்​டும் நினை​வுப்​படுத்தி உள்​ளது.

விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதேவை ஈரானின் அணுசக்தி தந்தை என்றே மேற்​கத்​திய நாடு​களும் இஸ்​ரேலும் கூறிவந்​தன. அந்​தளவுக்கு மிக முக்​கிய​மானவ​ராக இருந்​தார். இவர்​தான் ஈரானின் “பு​ராஜெக்ட் அமாத்” திட்​டத்​தின் மூளை​யாக செயல்​பட்​ட​வர் என்று மேற்​கத்​திய உளவு அமைப்​பு​கள் நம்​பின. அணு ஆ​யுதம், ஏவு​கணை, அதிநவீன ஆயுதங்​கள் தயாரிப்​பது​தான் இந்த திட்​டம். அதனால், கடந்த 2000-ம் ஆண்​டு​களில் ஈரான் அணு ஆ​யுதங்​களை தயாரிக்​கும் பணி​யில் ஈடு​படு​வ​தாக மேற்​கத்​திய நாடு​கள் பரபரப்​பாக பேசின. அத்​துடன் அமெரிக்க விஞ்​ஞானி ராபர்ட் ஓபன் ஹீமருடன், ஈரான் விஞ்​ஞானி மொசெனை ஒப்​பிட்டு செய்​தி​கள் வெளி​யா​யின.

இத்​தனைக்​கும் மொசென் வெளிவுல​குக்கு வராதவர். ஊடகங்​கள் எதி​லும் பேட்டி அளிக்​காதவர். இன்​னும் சொல்ல போனால், அவரது புகைப்​படம் கூட அவ்​வள​வாக வெளி​யில் வந்​த​தில்​லை. எந்த நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​காதவர். மிகமிக ரகசிய நடவடிக்​கை​களில் மட்​டுமே இருந்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அணு ஆ​யுத ஒப்​பந்​தத்​தில் ஈரான் கையெழுத்​திட்​டது. அப்​போது சீனா, பிரான்​ஸ், ஜெர்​மனி, ரஷ்​யா, பிரிட்​டன், அமெரிக்​கா, ஐரோப்​பிய யூனியனுடன் சேர்ந்து ஈரானும் கையெழுத்​திட்​டது. அதன்​படி, அணு ஆ​யுத தயாரிப்​புக்கு ஈரானுக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அப்​போது கூட விஞ்​ஞானி மொசெனின் பெயர் அடிபட​வில்​லை.

அதன்​பின், கடந்த 2018-ம் ஆண்​டு​தான் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நேதன்​யாகு, தேசிய தொலைக்​காட்​சி​யில் உரை​யாற்​றிய போது முதன் முதலில் ஈரான் விஞ்​ஞானி மொசென் பெயரை வெளி​யிட்​டார். அதன் பிறகு​தான் அவர் மீது குறி வைக்​கப்​பட்​டது. திட்​ட​மிட்டு நடத்​திய தாக்​குதலில் அவர் கொல்​லப்​பட்​டார். ஆனால், அவர் கொல்​லப்​பட்ட விதத்தை இன்று வரை ஈரான் மக்​கள் மட்​டுமல்ல வெளி​நாட்​ட​வர்​களும் ஆச்​சரி​யத்​துடன் நினை​வு​கூர்​கின்​றனர். அவரை கொன்​றது யார் என்​பது இன்று வரை மர்​மம்​தான். ஆனால், இஸ்​ரேல்​தான் கொன்​றது. அதற்கு பதிலடி தரு​வோம் என்று ஈரான் அப்​போதே உறு​தி​யாக கூறியது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பர் 27-ம் தேதி… ஈரானின் அப்​சார்ட் என்ற இடத்​தில் உள்ள தனது வீட்​டுக்கு மனை​வி, பாது​காவலர்​களு​டன் விஞ்​ஞானி மொசென் காரில் சென்று கொண்​டிருந்​தார். தலைநகர் டெஹ்​ரானின் கிழக்​குப் பகு​தி​யில் அப்​சார்ட் அமைந்​துள்​ளது. அவர் வழக்​க​மாக செல்​லும் பாதையில்​தான் கார் சென்​றது. சற்று தூரத்​தில் அவரது பாது​காப்பு வாகனம் பின்​தொடர்ந்​தது. அந்த பாதை​யில் சாலை​யோரம் ஒரு டிரக் நிறுத்​தப்​பட்​டிருந்​தது. அந்த டிரக்​கில் யாரும் இல்​லை. ஆனால் அந்த டிரக்​கில் முகத்தை அடை​யாளம் காணும் கருவி பொருத்​தப்​பட்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது. அத்​துடன் டிரக்​கில் இயந்​திர துப்​பாக்​கி, வெடிபொருட்​களும் இருந்​துள்​ளன. அந்த துப்​பாக்கி செயற்​கைக் கோள் மூலம் இணைக்​கப்​பட்​டிருந்​தது. சாலை​யில் வேறு தீவிர​வா​தி​களோ, உளவாளி​களோ இல்​லை.

விஞ்​ஞானி மொசென் கார் டிரக் அரு​கில் சென்ற போது, நாய் ஒன்று குறுக்கே வந்​துள்​ளது. உடனே காரின் வேகம் குறைக்​கப்​பட்​டது. அப்​போது டிரக்கில் இருந்து சரமாரி​யாக துப்​பாக்​கிக் குண்​டு​கள் கார் மீது பாய்ந்​தன. அதில், கார் தடு​மாறி வளை​வாக சென்று சாலை​யில் நின்​றது. பின்​னர் 2-வது முறை​யாக துப்​பாக்​கிக் குண்​டு​கள் பாய்ந்​தன. அதில் மொசென் தோளில் ஒரு குண்டு பாய்ந்​தது. உடனே கீழே இறங்​கிய மொசென், கார் கதவுக்கு பின்​னால் ஒளிந்து கொண்​டார். எனினும், அவரது முதுகில் துப்​பாக்​கிக் குண்​டு​கள் பாய்ந்​தன. சாலை​யில் சரிந்து விழுந்த மொசென் உயி​ரிழந்​தார். அடுத்த சில விநாடிகளில் சாலை​யோரம் நின்​றிருந்த டிரக்​கும் வெடித்து சிதறியது.

அவருக்கு அரு​கில் இருந்த அவரது மனைவி மீது தாக்​குதல் நடத்​தப்​பட​வில்​லை. மொசென் மீது மட்​டும் 15 குண்​டு​கள் பாய்ந்​துள்​ள​தாக ஈரான் கூறியது. இந்த தாக்​குதல் முழு​வதும் ஒரு நிமிடத்​துக்​குள் நடந்​தது முடிந்​தது, ஈரானுக்கு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. ஈரானுக்கு வெளி​யில் இருந்து செயற்​கைக்​கோள் மூலம் இயந்​திர துப்​பாக்​கியை இயக்க செய்து மொசெனை இஸ்​ரேல் கொன்​ற​தாக ஈரான் அதி​காரி​கள் பின்​னர் குற்​றம் சாட்​டினர். மேலும், படு​கொலை நடந்த பாணியை பார்க்​கும் போது இஸ்​ரேலின் மொசாத் உளவு அமைப்​பின் கைவரிசை இருப்​ப​தாக ஈரான் உறு​தி​யாக கூறியது.

அதற்கு சில நாட்​கள் பிறகு பல்​வேறு தகவல்​கள் வெளிவந்​தன. விஞ்​ஞானி மொசெனை பல மாதங்​களாகவே இஸ்​ரேல் கண்​காணித்து வந்​துள்​ளது. அவரை கொல்​வதற்​காக பல்​வேறு ஆயுதங்​களை உதிரி பாகங்​களாக ஈரானுக்​குள் இஸ்​ரேல் உளவு அமைப்​பான மொசாத் கடத்தி சென்​றுள்ளது. அங்கு அவற்றை இணைத்து ரகசி​ய​மாக சோதனை​யும் செய்து பார்த்​துள்​ளது என்று தகவல்​கள் வெளி​யா​யின. உலக வரலாற்​றிலேயே செயற்​கைக் கோள் மூலம் ஆயுதங்​களை இயக்கி நடத்​திய தாக்​குதல் அதுவே முதல் என்​றும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து ஈரான் புரட்​சிப் படை பிரி​கேடியர் ஜெனரல் அலி படாவி கூறும்​போது, “விஞ்​ஞானி மொசெனை மட்​டும் துல்​லிய​மாக குறி வைத்து தாக்​குதல்​ நடத்​தப்​பட்​டுள்​ளது. அவருடன்​ சென்​ற மனை​வி மற்​றும்​ பாது​காவலர்​களுக்​கு சிறு கா​யம்​ கூட ஏற்​பட​வில்​லை” என்​றார்​. எனவே, விஞ்​ஞானி மொசென்​ படுகொலை இன்​று வரை பேசப்​படுகிறது.



Read More

Previous Post

ஆகஸ்ட் 15 முதல் ஆண்டுக்கு ரூ.3000 சுங்கச்சாவடி பாஸ்: நிதின் கட்கரி

Next Post

உணவுக் கொள்கையை மாற்றியமைக்காவிட்டால் சுகாதார நெருக்கடி – Malaysiakini

Next Post
உணவுக் கொள்கையை மாற்றியமைக்காவிட்டால் சுகாதார நெருக்கடி – Malaysiakini

உணவுக் கொள்கையை மாற்றியமைக்காவிட்டால் சுகாதார நெருக்கடி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin