Last Updated:
நியூசிலந்தில் நிறைய டி20 திறமையாளர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, உலகக் கோப்பைக்கு தயார்படுத்துவது முக்கியம் என்றும் கேன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011 ஆம் டி20 போட்டிகளில் அறிமுகமான கேன் வில்லியம்சன், 75 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
35 வயதான கேன் வில்லியம்சன் 33 சராசரியுடன் 2575 ரன்கள் குவித்து, டி20 போட்டிகளில் நியூசிலாந்தில் அதிக ரன்கள் குவித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். அவரது தலைமையில் நியூசிலாந்து அணி இரண்டு முறை ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்திய ரசிகர்களால் கேன் மாமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து தாம் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று அறிவித்துள்ளார். தனது இந்த முடிவு, நியூசிலாந்து அணிக்கு அடுத்த தொடர்களுக்கும், அவர்களின் அடுத்த முக்கிய இலக்கான டி20 உலகக் கோப்பைக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
November 02, 2025 7:57 PM IST


