ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2023, மே 19-ம் தேதி அறிவித்தது. அந்த நேரத்தில், புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி ஆகும். ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தத் தொகை ஜனவரி 31, 2026 அன்று வெறும் ரூ.5,609 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலர் தங்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கி முறைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


