Last Updated:
நிதின் நபின் தேசிய தலைவராக பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் வரும் 20 ஆம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தேசிய தலைவராக உள்ள ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பாஜகவின் தேசிய செயல் தலைவராக பிகாரை சேர்ந்த அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டார்.
பாஜக தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற நிதின் நபின் அக்கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 19 ஆம் தேதி, சம்பிரதாய முறைக்கு தேர்தல் நடத்தி, அதற்கு அடுத்த தினமே, நிதின் நபின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


