20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், தென்னாப்ரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து, சூப்பர் எயிட் சுற்று தொடங்கியள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டிகாக், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அரைசதத்தை நெருங்கிய கேப்டன் மார்க்ரம் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். டி காக் 74 ரன்களில் விக் கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்களில் தென்னாப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.
195 ரன்கள எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி அமெரிக்க அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. எனினும் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர், ஆண்ட்ரீஸ் கவுஸ் தென்னாப்ரிக்க வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
6ஆவது விக்கெட்டிற்கு இவரும், ஹர்மீத் சிங்கும் 91 ரன்கள் எடுத்தனர். ஹர்மீத் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரீஸ் கவுஸ் 80 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் அமெரிக்க அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்க அணியின் வெற்றிக்கு உதவிய குயின்டன் டிகாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
