இந்த குழு மதுரோ என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார், எந்த நேரத்தில் தூங்குகிறார், அவரது செல்லப்பிராணிகள் என்னென்ன என்பதை ’இன்ச் பை இன்சாக’ கண்காணித்து வந்தது. டிசம்பர் மாத தொடக்கத்தில் மதுரோவின் பாதுகாப்பான வீடு போல அமெரிக்காவில் செட் அமைத்து, தாக்குதலை எப்படி நிகழ்த்தலாம் என ஒரு மாதமாக டெல்டா படை வீரர்கள் ஒத்திகையிலும் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.


