கோத்த பாரு: சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 3.2 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகளை கைப்பற்றியது. குவா முசாங்கில் இருந்து ஜெலி-கிரிக் வழித்தடத்தில் 11 டன் எடை கொண்ட லோரியில் இருந்து இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கிளந்தான் இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் கூறினார்.
49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களில் சிகரெட்டுகள் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், குவா முசாங்கில் சுங்க அமலாக்கக் கிளை அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு தனது அலுவலகம் புத்ராஜெயாவில் உள்ள சுங்கத் தலைமையகத்திற்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்ததாக வான் ஜமால் கூறினார். தற்போது, கோத்தா பாருவில் மட்டுமே எங்களுக்கு அலுவலகம் உள்ளது என்று அவர் கூறினார்.
குவா முசாங்கில் அலுவலகம் இருப்பது மாநிலத்தில் மிகவும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்யும் என்று அவர் நம்பினார். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சுங்கக் கட்டணமில்லா லைன் 1-800-88-8855 அல்லது அருகில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்திற்கு தகவக் வழங்கி கடத்தலை முறியடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

