ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய போருக்கு இன்று ஒருமாதப்பூர்த்தி கடக்கின்றது. கடந்தமாத பெப்ரவரி 28 ஆந் திகதியும் இன்றுபோல ஒரு சனிக்கிழமையாக இருந்த வேளை ஆரம்பித்த இந்தப்போர் ஒருமாத காலத்தை கடக்கும் வேளை தெரியும் நிலவரங்கள் போரை ஏப்ரலில் இன்னும் தீவிரப்படுத்தக் கூடும் என்ற அச்சத்தைக் காட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இப்போது பிலிப்பைன்ஸில் அவசர காலநிலையை அறிவிக்கும் அளவுக்கு நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறான ஒரு நிலை எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு வராது என்பதற்கு உறுதிப்பாடுகள் ஏதும் இல்லை.
ஒருவேளை இலங்கையின் நிலைமோசமாககூடாது என்பதற்கு உள்ளூரில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்ற குறுகுறுப்பில் இந்தியாவும் தனது இன்னொரு மாநிலம் போலவே இலங்கையை கையாளத் தலைப்படுகிறது.
இதனால் தான் இதனால் தான் மோடியுடன் அநுர பேச்சு நடத்திய 4 நாட்களில் ஒரு அவசர எரிபொருள் கப்பல் இன்று கொழும்பை சென்றடைந்துள்ள பின்னணியில் இந்தப்போரின்; இன்றைய ஒருமாத பூர்த்தியுடன் உள்ளுர் உலகநிலவரங்களை தழுவிவருகின்றது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

