கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை குழந்தை ஒன்றை உணர்வு இழந்த நிலையில் சுங்கை புலோ மருத்துவமனைக்கு பெற்றோரால் கொண்டு வரப்பட்டு பின்னர் சிகிக்ச்ஹே பலனின்றி உயிரிழந்தது. இந்த தகவலை காவல்துறை உறுதிப்படுத்தியது.
குழந்தையின் உடலில் தூசு, அழுக்கு படிந்த அடையாளங்கள், வீக்கங்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹாஃபிஸ் நோர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டின் அடிப்படையில் 27 மற்றும் 28 வயதுடைய பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காயங்கள் முழு உடலிலும் காணப்பட்டுள்ளன. இதை தவிர வாயும் மூக்கும் பகுதியில் உலர்ந்த இரத்தமும் இருந்தது,” என அவர் கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து தம்பதியை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் கடந்தகாலத்தில் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.