புதுடெல்லி,மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரவி அசோக் குமாரே(35) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு 2 வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு கீழ் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அந்த தண்டனையை மும்பை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவர், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் ரவி அசோக் குமாரேவுக்கு மரண தண்டனை உறுதி ஆகியுள்ளது.




