• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி | UAE stunned the cricketing world with a thrilling victory over Bangladesh in the second T20I

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி | UAE stunned the cricketing world with a thrilling victory over Bangladesh in the second T20I
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி.

ஷார்ஜாவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன 59 ரன்கள் விளாசினார். தவுஹித் ஹிர்டோய் 45, கேப்டன் லிட்டன் தாஸ் 40 ரன்கள் சேர்த்தனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஜவாதுல்லா 3, சாகிர் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் முகமது வசீம் 42 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். முகமது ஸோஹயிப் 38, ஆசிப் கான் 19 ரன்கள் சேர்த்தனர். ஹைதர் அலி 15, மதியுல்லா கான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை ஐக்கிய அரபு அமீரக அணி வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிக்கு கடைசி 11 பந்துகளில் 29 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய ஷோரிபுல் இஸ்லாம் 17 ரன்களை தாரைவார்த்தார். துருவ் பிரஷார் பவுண்டரி அடித்த நிலையில் ஹைதர் அலி சிக்ஸர் விளாசினார். கடைசி பந்தில் வங்கதேச அணி ஓவர்த்ரோவில் 5 ரன்களை அள்ளிக் கொடுத்தது.

தன்ஸிம் ஹசன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் துருவ் பிரஷார் (11), 2-வது பந்தில் சிக்ஸர் விளாசிய நிலையில் அடுத்த பந்தில் போல்டானார். எனினும் ஹைதர் அலி நிதானமாக விளையாடி வெற்றியை வசப்படுத்த உதவினார்.

2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 1-1 சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் டி 20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று (21-ம் தேதி) நடைபெறுகிறது.



Read More

Previous Post

"விரட்டி பிடிக்கும் டிராபிக் போலிசார்" சென்னை கமிஷனர் போட்ட புது உத்தரவு! இந்த 5 விதிமீறல்களுக்கு மட்டும் தான் அபராதம்!

Next Post

‘LGBTQ+’-ஐ எதிர்த்துப் போராடுவதில் திரங்கானுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக் கிளந்தான் தயாராக உள்ளது

Next Post
‘LGBTQ+’-ஐ எதிர்த்துப் போராடுவதில் திரங்கானுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக் கிளந்தான் தயாராக உள்ளது

‘LGBTQ+’-ஐ எதிர்த்துப் போராடுவதில் திரங்கானுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக் கிளந்தான் தயாராக உள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin