புலாவ் ஹந்து தீவில் நேற்று மார்ச் 2ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டன.
இதில் ஐந்து பயணிகள் படகில் இருந்து விழுந்தனர், அதில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால் ஒருவரைக் காணவில்லை என்றும், தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கடலோரக் காவல்படை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகளும் தேடும் பணியில் உதவி செய்து வருகின்றன.
மேலும் கடல், துணைமுக ஆணையம் ரோந்துக் கப்பலை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
அவர்கள் யார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”