Last Updated:
பிரதமர் மோடி ஜூலை 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் அனைத்து அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
July 11, 2025 1:59 PM IST


