• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2 நாட்களில் மரணம் நிச்சயம் – ஜப்பானில் பரவும் புதிய வகை நோய்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
2 நாட்களில் மரணம் நிச்சயம் – ஜப்பானில் பரவும் புதிய வகை நோய்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டே நாட்களில் மனிதர்களின் உயிரைக் கொல்லும் தன்மை கொண்ட அரிய வகை நோய் ஜப்பானில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயின் அறிகுறிகள் என்னென்ன?, பாதுகாத்துக் கொள்வது எப்படி? விரிவாக பார்க்கலாம்.

உலகையே உலுக்கிய கொரோனாவின் மரண ஓலம் சற்று ஓய்ந்துள்ள வேளையில், ஜப்பான் நாட்டு மக்களுக்கு பேரிடியாய் இறங்கியுள்ளது STSS எனப்படும் அரிய வகை நோய். காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், இந்த வகை நோய், தாக்கிய இரண்டே நாட்களில் உயிரைக் கொல்லும் என்பதுதான்.

விளம்பரம்

streptococcal toxic shock syndrome என அழைக்கப்படும் இந்த வகை அரிய நோய் ஜப்பான் நாட்டில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது என்பதை மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது, ஜப்பான் மட்டுமின்றி, உலக நாடுகளை ஒரு கனம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

விளம்பரம்

ஜப்பானில் கடந்த ஜூன் 2 ஆம் தேதிவரை இந்த வகை அரிய நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்ததாகவும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோயின் தாக்கத்தை கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஒவ்வொரு முறையும் சரியான பக்குவத்தில் சாதத்தை சமைப்பதற்கான 7 டிப்ஸ்.!


ஒவ்வொரு முறையும் சரியான பக்குவத்தில் சாதத்தை சமைப்பதற்கான 7 டிப்ஸ்.!

குறிப்பாக group A Streptococcus எனப்படும் GAS வகை நோய், அதிகப்படியான மரணங்களை ஏற்படுத்தும் என்றும், இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீவிரமாக பரவும் என்பதையும் மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

விளம்பரம்

மூட்டு வலி, தொண்டையில் வீக்கம் அல்லது புண், குமட்டல், வாந்தி உள்ளிட்டவை இந்த அரிய வகை நோயின் முதற்கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் என்றும், இதனைத் தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்து மரணிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகை நோய் முதியவர்களை அதிகம் தாக்கும் என்றும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது.

விளம்பரம்

இந்த நோய் தாக்கப்பட்ட 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களுக்கான பேராசிரியர் கென் கிகுசி கூறியுள்ளார். காலையில் நோயாளியின் காலில் வீக்கம் கண்டறியப்பட்டால், மதியம் அது முழங்காலுக்கும் பரவி, 2 நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு… அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி… பீதியை கிளப்பும் சம்பவம்!

ஜப்பானில் இந்த விகிதத்தில் பரவி வரும் தொற்றுகளால் நடப்பு ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிக்க கூடும் என்றும், 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்றும் கிகுசி கூறியுள்ளார். இந்த அரிய வகை நோய் பரவாமல் இருக்க, கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

ஜப்பானை தவிர்த்து, இந்த அரிய வகை நோயின் அறிகுறிகள் 5 ஐரோப்பிய நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை கொண்டுவர உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

Read More

Previous Post

மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிக்கு மாற்றுங்கள்: ம.பி. அரசுக்கு என்சிபிசிஆர் பரிந்துரை | Send Hindu children studying in madrasas to normal schools

Next Post

பெர்சத்து தேர்தலில் 2வது இடத்துக்கு ஹம்சா, அஸ்மின் போட்டியிடுகின்றனர் – Malaysiakini

Next Post
பெர்சத்து தேர்தலில் 2வது இடத்துக்கு ஹம்சா, அஸ்மின் போட்டியிடுகின்றனர் – Malaysiakini

பெர்சத்து தேர்தலில் 2வது இடத்துக்கு ஹம்சா, அஸ்மின் போட்டியிடுகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin