கொழும்பில் நபர் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப காவல்துறை பரிசோதகர் (சப்இன்ஸ்பெக்டர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனியில் காவல்துறை பயிற்சி பாடநெறியில் கற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் 21 ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023ம் மாச் 18 ஆம் திகதி கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் போது ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மட்டு வெல்லாவெளி காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் களனியில் உள்ள காவல்துறை பயிற்சி நெறிக்கு கற்பதற்காக சென்றுள்ள நிலையில் இந்த ஆள் கடத்தல் கொள்ளை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த சிஜடி யினர் அவரை பயிற்சியில் இருக்கும் போது புதன்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 21 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட்து.
இதனை தொடர்ந்து குறித்த காவல்துறை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

