சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் நேற்று ஏற்பட்ட பேரழிவு தரும் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பாக இரண்டு கட்டுமான நிறுவனங்களைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தத் தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் பலர் இடம்பெயர்ந்தனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கானைத் தொடர்பு கொண்டபோது, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுபவர்களில் டெவலப்பரும் அதன் முக்கிய ஒப்பந்ததாரரும் இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.
“(அவர்கள் எங்கள் விசாரணையின் கீழ் உள்ளவர்களில் அடங்குவர்,” என்று அவர் ஒரு சுருக்கமான குறுஞ்செய்தியில் கூறினார்.
பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் கசிவு மற்றும் தீப்பிடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய முயற்சித்து வருவதால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் அந்த நிறுவனங்களும் உள்ளதா என்பதை சரிபார்க்க மலேசியாகினி இன்று காலை ஹுசைனை (மேலே) தொடர்பு கொண்டது.
நேற்று காலைக் குழாய் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து, அருகில் உள்ள கட்டுமானத் திட்டத்துடன் தொடர்புடைய மண் வேலைகளுடன் தொடர்புடையது என்று சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் பரவின.
பல சமூக ஊடக பயனர்கள், குழாய் பாதைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கனரக இயந்திரங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் புகைப்படம் உட்பட, கட்டுமானப் பணிகளின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள் வரும் வரை நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. மலேசியாகினி இரு நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பதிலைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், இன்று காலைச் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட்டின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் செர்டாங்கில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 31 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அகமட் (வலது) மற்றும் பண்டார் துன் ரசாக் எம்பி வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் நேற்று செர்டாங் மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கியவர்களைச் சந்தித்தனர்
தற்காலிக முகாம்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட பல பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகப் புகார் அளித்துச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதால், நேற்றைய எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வான் அஸ்லான் கூறினார்.
பாதிக்கப்பட்ட வளாகங்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையும் முறையே 235 மற்றும் 399 ஆக அதிகரித்துள்ளது, இதில் சம்பவத்தின்போது தீப்பிடித்த 87 வீடுகள் மற்றும் 225 வாகனங்கள் அடங்கும்.
‘ஆதாரங்களுடன் வாருங்கள்’
இதற்கிடையில், நேற்றைய தீ விபத்து தொடர்பாகத் தவறுகள் நடந்ததற்கான ஆதாரங்களுடன் பொதுமக்கள் தாமாக முன்வந்து காவல்துறைக்கு தகவல்களை வழங்குமாறு சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்வதன் மூலம், எரிவாயு குழாய் கசிவு மற்றும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளின் விசாரணையில் அவர்கள் உதவ முடியும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி
“உள்ளூர் அதிகாரசபை உட்பட மாநில அரசு இந்த விசாரணையில் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது”.
“பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் ஆறுதல் ஆகியவை மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் முன்னுரிமை,” என்று அவர் இன்று கூறியதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.