Last Updated:
தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தான் உலகிலேயே மிக முன்னதாக புத்தாண்டைக் கொண்டாடுகின்றன.
கிரிபாட்டி தீவுகளுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து 2 ஆவது நாடாக புத்தாண்டை வரவேற்றுள்ளது. இதையொட்டி ஆக்லாந்து நகரின் ஐகானாக திகழும் ஸ்கை டவரில் கண்கவரும் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.
2026-ஆம் புத்தாண்டை உலகிலேயே மிக உற்சாகமாக வரவேற்றுள்ள முதல் முக்கிய நகரம் என்ற பெருமையை நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland) நகரம் பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் மிக உயரமான கட்டிடமான 240 மீட்டர் உயர ஸ்கை டவர் கோபுரத்திலிருந்து வண்ணமயமான வானவேடிக்கைகளை வெடித்து ஆக்லாந்து மக்கள் 2026-ஐ வரவேற்றனர்.
நகரின் மையப்பகுதியில் மழை பெய்து ஈரப்பதமான வானிலை நிலவிய போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த கண்கவர் கொண்டாட்டத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தான் உலகிலேயே மிக முன்னதாக புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கும் ஆக்லாந்து நகரில் நள்ளிரவு 12 மணி பிறக்கும்போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டு பிறக்க இன்னும் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு நியூசிலாந்து நேரத்தால் முந்தியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முன்பே நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடி முடித்துவிடும். குறிப்பாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு பிறப்பதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பே ஆக்லாந்தில் 2026 பிறந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2- ஆவது நாடாக 2026 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.. வான வேடிக்கையுடன் பொதுமக்கள் கொண்டாட்டம்


