Last Updated:
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் எடுத்திருந்தன.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் எடுத்திருந்தன.
டெஸ்ட் சாம்பியன் அணியான தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடர்ந்த இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
November 16, 2025 11:25 AM IST


