Last Updated:
இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் 269 ரன்கள் குவித்தார்.
அதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால், 180 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 130 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் சதம் விளாசியுள்ளார்.
July 05, 2025 8:26 PM IST