Last Updated:
வட்டி விகிதத்தை பல வங்கிகள் குறைத்திருந்தாலும் கூட, இப்போதும் நல்ல வட்டியை வழங்கும் சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது, FD மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 5.5%-ஆகக் குறைத்தது. இது ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் நபர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், வங்கிகள் தங்கள் FD-க்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இது FD-ஐ பெரிதும் சார்ந்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிலையான வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களை பாதிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. FD திட்டங்களைப் பொறுத்தவரை, வங்கிகள் மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எனவே, வட்டி விகிதத்தை பல வங்கிகள் குறைத்திருந்தாலும் கூட, இப்போதும் நல்ல வட்டியை வழங்கும் சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது, FD மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், FD திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சில வங்கிகளின் பட்டியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- இரண்டு வருடம் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு CSB வங்கி 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் வங்கிகளில், இதுவே சிறந்த வட்டி விகிதமாகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1.15 லட்சம் கிடைக்கும்.
- RBL வங்கியானது, இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் சுமார் ரூ.1.15 லட்சம் இறுதியில் கிடைக்கும்.
- இரண்டு வருட கால அவகாசம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பந்தன் வங்கி 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்ச்சியடையும் போது தொகை ரூ.1.15 லட்சமாகக் கிடைக்கும்.
- 2 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு DCB வங்கி 7.15 சதவீத வட்டியை வழங்குகிறது. இதில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகையானது, முதிர்வுக்குப் பிறகு ரூ.1.14 லட்சமாகும்.
- இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகிய இரு வங்கிகளும், இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இதன் மூலம் ரூ.1 லட்சம் முதலீடு முதிர்வு தேதியில் ரூ.1.14 லட்சமாக வளரும்.
- இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் இரண்டாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. ரூ.1 லட்சம் முதலீட்டின் முதிர்வு தேதியில் ரூ.1.14 லட்சம் கிடைக்கும்.
- 2 ஆண்டுகால நிலையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.85 சதவீத வட்டி விகிதத்தை கரூர் வைஸ்யா வங்கி வழங்குகிறது.
- ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கர்நாடகா வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகிய வங்கிகள் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
- இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC, ரூ.5 லட்சம் வரையிலான FD-க்களுக்கு பாதுகாப்பை உத்தரவாதம் அளிக்கிறது.
July 26, 2025 11:59 AM IST