Last Updated:
தங்களது உறவில் ராஜலட்சுமி தலையிடுவது பிடிக்காத கோவில் பூசாரியான கணேஷ் ரத், சிறுமியை மூளைச்சலவை செய்து, ராஜலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
2 ஆண்களை காதல் செய்ய இடையூறாக இருந்த தாயை கொலை செய்துள்ளார் 13 வயது வளர்ப்பு மகள் ஒருவர்.
ஒடிசாவில் 54 வயதுடைய பெண் ராஜலட்சுமி கர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இவரும், இவரது கணவரும் குழந்தை இல்லாததால், புவனேஷ்வரில் 3 நாட்களேயான பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
பெண் குழந்தை தத்தெடுத்த ஒரே ஆண்டில் கணவரும் இறந்துவிட, அந்த பெண் குழந்தையை இவர் மட்டும் வளர்த்து வந்துள்ளார். பெண் குழந்தை கேந்திரிய வித்யாலயாவில் படிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் பராலகேமுண்டிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கே ஒரு வாடகை வீடு எடுத்து இவர்கள் இருவரும் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த சிறுமிக்கு கணேஷ் ரத் (வயது 21), மற்றும் தினேஷ் சாஹு (20) என்ற இரண்டு ஆண் நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராஜலட்சுமி சிறுமியை கண்டித்த நிலையில், அது அந்த மூவருக்கும் பிடிக்கவில்லை.
தங்களது உறவில் ராஜலட்சுமி தலையிடுவது பிடிக்காத கோவில் பூசாரியான கணேஷ் ரத், சிறுமியை மூளைச்சலவை செய்து, ராஜலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் அவரை கொலை செய்தவுடன் அவரது சொத்துக்களை பறிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியும் தனது தாய்க்கு தூக்க மாருந்து கலந்துகொடுத்து, அவர் தூங்கியவுடன் தலையணையை வைத்து கொலை செய்துள்ளார். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற அவரது உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்களிடம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக சிறுமி கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளதால், அவரது உறவினரும் அதை நம்பியுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் முடிந்து, சிறுமி கிளம்பியபோது தனது செல்போனை புவனேஷ்வரில் விட்டுச் சென்றுள்ளார்.
அந்த போனை பார்த்த ராஜலட்சுமியின் சகோதரர் அதிர்ச்சியடைந்துள்ளார். சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் எப்படி கொலை செய்வது என்று கணேஷ் ரத்துடன் உரையாடியுள்ளார். அப்போதுதான் அந்த திட்டம் குறித்து ராஜலட்சுமியின் சகோதரருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 30 கிராம் தங்க நகைகளும், 3 செல்போனும் பறிமுதல் செய்துள்ளனர்.
Odisha (Orissa)


