• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரூ.70 லட்சத்திற்கு பரிசு தொகை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி இம்மாதம் 11-ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ.70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது.

விளம்பரம்

இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளனர்.

கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அவ்வெற்றி அமைந்தது.

விளம்பரம்

இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் – சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ், எம்.பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள்.

இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? – நடிகை கஸ்தூரிக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம்!

இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பை காங். வலியுறுத்துவது ஏன்? – ராகுல் காந்தி விவரிப்பு | Why Caste Census So important – Rahul Gandhi Explains

Next Post

மின் கட்டண குறைப்பு முதல் தூர்வாருதல் வரை – முதல்வர் ஸ்டாலினிடம் கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு | industry expects the demands to be fulfilled in coimbatore

Next Post
மின் கட்டண குறைப்பு முதல் தூர்வாருதல் வரை – முதல்வர் ஸ்டாலினிடம் கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு | industry expects the demands to be fulfilled in coimbatore

மின் கட்டண குறைப்பு முதல் தூர்வாருதல் வரை - முதல்வர் ஸ்டாலினிடம் கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு | industry expects the demands to be fulfilled in coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin