கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் 1MDB மோசடியில் தொடர்புடைய 346 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி வழக்கை மலேசிய மேம்பாட்டுக் கழகம் ரோஸ்மாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளது.
அந்த மோசடியோடு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் ரோஸ்மாவுக்குச் சொந்தமான பிரத்யேக வடிவமைப்புடைய கைப்பைகள், நகைகள்,பிற ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவோ விற்கவோ மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஜூன் 14ஆம் தேதி ரோஸ்மா உறுதியளித்துள்ளார்.
நீதித்துறை ஆணையர் அட்லின் அப்துல் மஜித் முன்னிலையில் அவரது வழக்கறிஞர்கள் ரேசா ரஹீம், முஹமட் ஷஃபீ அப்துல்லா ஆகியோர் காணொளி மூலம் இந்த உத்தரவாதத்தை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


