முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு யூசர்களுக்கு விமானத்தில் பயணிக்கும்போது கூட பிறருடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய இன்-ஃபிளைட் ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்-ஃபிளைட் ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்திய பாரதி ஏர்டெல் :
இந்த இன்-ஃபிலைட் ரோமிங் திட்டத்தை பயன்படுத்தி யூசர்கள் தரையில் இருந்து 1000 அடி உயரத்தில் இருந்தால் கூட அதி வேகமான இன்டர்நெட் பிரௌசிங்கை அனுபவிக்கலாம். 2,997 ரூபாய் பயன்படுத்தி ப்ரீபெய்டுக்கும், 3999 ரூபாய் பயன்படுத்தி போஸ்ட்பெய்டிற்கும் செலுத்தி ரோமிங் பேக்குகளை சப்ஸ்கிரைப் செய்யும் கஸ்டமர்கள் இந்த இன்-ஃபிளைட் ரோமிங் சலுகைகளை ஆட்டோமேட்டிக்காக பெறுவார்கள். ஏர்டெலின் இந்த புதிய இன்-ஃபிளைட் ரோமிங் திட்டமானது வாய்ஸ், டேட்டா மற்றும் SMS சேவைகளை வழங்குகிறது. ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு யூசர்கள் ஆகிய இருவருமே இன்-ஃபிளைட் ரோமிங் திட்டத்தை 195 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த அனைத்து சலுகைகளும் 24 மணி நேர வேலிடிட்டியுடன் வருகிறது.
இந்த 195 ரூபாய் திட்டத்துடன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு யூஸர்கள் 250MB டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் SMS ஆகியவற்றை பெறுவார்கள். இதுவே 295 ரூபாய் திட்டத்தில் 500MB டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் SMS போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.
595 ரூபாய்க்கான மற்றுமொரு திட்டத்தில் 1GB டேட்டா மற்றும் மீதமுள்ள இரண்டு திட்டங்கள் போலவே காலிங் மற்றும் SMS பலன்கள் கொடுக்கப்படுகிறது. பயணத்தின்பொழுது கஸ்டமர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் 24 x 7 மணி நேர தொடர்பு மையங்களை அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கஸ்டமர்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு போன் செய்து நெட்வொர்க் சிறப்பு குழுவை அணுகி, தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் Airtel Thanks அப்ளிகேஷனில் லாகின் செய்து, டேட்டா பயன்பாட்டை கண்காணிப்பது மற்றும் கூடுதல் நிமிடங்களை வாங்குவது போன்றவற்றையும் செய்யலாம்.
Also Read : GST முதல் FASTag வரை.. மார்ச் மாதம் முதல் 6 முக்கிய மாற்றங்கள்
இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் கஸ்டமர் அனுபவம் மற்றும் மார்க்கெட்டிங் டைரக்டர் அமித் திருப்பதி பேசுகையில், “ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு தடையில்லாத மொபைல் இணைப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. இன்று இதே சேவையை விமானத்தில் பயணிக்கும் பொழுது கூட அனுபவிக்கும் வாய்ப்பினை கஸ்டமர்களுக்கு வழங்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதன் மூலமாக விமானத்தில் பயணிக்கும்பொழுது தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருப்பதற்கு ஹை ஸ்பீட் இன்டர்நெட் மற்றும் தடையில்லாத வாய்ஸ் காலிங் வசதியை யூசர்கள் பெறுவார்கள்.”
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…