• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

1947ல் தங்கத்தில் ரூ.1,000 முதலீடு.. இன்று 1,711 மடங்கு லாபம்.. தங்கம் vs வெள்ளி எது பெஸ்ட்? | ₹1,000 Gold Investment in 1947 Would Be Worth ₹17 Lakh Today: Know the Gold vs Silver Returns

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
1947ல் தங்கத்தில் ரூ.1,000 முதலீடு.. இன்று 1,711 மடங்கு லாபம்.. தங்கம் vs வெள்ளி எது பெஸ்ட்? | ₹1,000 Gold Investment in 1947 Would Be Worth ₹17 Lakh Today: Know the Gold vs Silver Returns
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Updated: Tuesday, August 18, 2026, 7:10 [IST]

சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் வெறும் 1000 ரூபாயை நாம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று நமக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் தெரியுமா? தங்கம் என்பது எப்போதுமே இந்தியர்களின் முக்கிய முதலீடாக இருக்கும் சூழலில், 1947ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அது எந்தளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

நமது நாட்டில் பொதுமக்கள் எப்போதுமே முதல் சேமிப்பாக தங்கத்தையே பார்ப்பார்கள். ஏழை மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவருமே முடிந்த வரை முதலில் தங்கத்தையே வாங்க பார்ப்பார்கள். அப்படி சுதந்திரம் அடைந்தபோது நாம் 1000 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் இப்போது அது எந்தளவுக்கு நமக்கு லாபம் கொடுத்திருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

Gold silver personal finance

எவ்வளவு லாபம்?

1947ல் நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் ரூ.88.62. இப்போதே அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.51 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றும் மத்திய அரசின் டேட்டாவின்படி, 1947ல் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.88.62ஆக இருந்தது. இப்போதைய ரேட் உடன் ஒப்பிட்டால் 79 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 1,711 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 1947ல் 1,000 ரூபாய்க்கு தங்கத்தை வாங்கியிருந்தால் இன்று அது ரூ.17.1 லட்சமாக இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் தங்கம் சராசரியாக சுமார் 9.9 சதவீதம் நமக்கு லாபம் கொடுத்திருக்கும்.

6 பேர்.. ரூ.1.87 லட்சம் முதலீடு! ஒரு சின்ன ரூம்தான் ஆபீஸ்! இன்று பல லட்சம் கோடி ஆலமரமாக நிற்கும் HCL

6 பேர்.. ரூ.1.87 லட்சம் முதலீடு! ஒரு சின்ன ரூம்தான் ஆபீஸ்! இன்று பல லட்சம் கோடி ஆலமரமாக நிற்கும் HCL

தங்கம் விலை

அதேநேரம் இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தங்கத்தின் விலை சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ந்து ஒரே வேகத்தில் உயரவில்லை. 1950ல் 10 கிராம் தங்கம் ரூ.99.18ஆக இருந்த தங்கம் விலை, 1964ல் ரூ.63.25 ஆக சரிந்தது. அதன் பிறகு விலை மீண்டும் உயர தொடங்கியது. 1970ல் ரூ.184.50ஆக இருந்த தங்கம், 1980ல் முதல்முறையாக ரூ.1000ஐ கடந்து, ரூ.1,330ஆக விற்கப்பட்டது.

அதன் பிறகு ஆண்டுகள் செல்ல செல்ல தங்கம் உயரும் வேகமும் அதிகரித்தது. 2000-01ல் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.4,473.60ஆக இருந்தது. 2010-11ல் இது ரூ.19,227.08ஆகவும், 2020-21ல் ரூ.48,723.22 ஆகவும் உயர்ந்தது. 2024-25 இது ஜெட் வேகத்தில் உயர்ந்து ரூ.75,841.87ஐ தொட்ட நிலையில், அதன் பிறகு மேலும் வேகமாக உயர்ந்து இப்போது ரூ.1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

ரத்தன் டாடாவின் நம்பிக்கை தளபதி.. TCSஸை வளர்த்தெடுத்த தமிழர்.. டாடா சன்ஸ் சந்திரசேகரன் ராஜினாமா ஏன்?

ரத்தன் டாடாவின் நம்பிக்கை தளபதி.. TCSஸை வளர்த்தெடுத்த தமிழர்.. டாடா சன்ஸ் சந்திரசேகரன் ராஜினாமா ஏன்?

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் பல ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை 1970 முதல் நமக்கு டேட்டா கிடைக்கிறது. அப்போது ஒரு கிலோ வெள்ளியின் சராசரி விலை வெறும் ரூ.536.08. இப்போது வெள்ளி விலை ரூ.2 லட்சத்திற்கு மேல் போய்விட்டது. அதாவது 1970-71 உடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை சுமார் 370 மடங்கு உயர்ந்துள்ளது.

தங்கத்தை விட வெள்ளியின் விலையே அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. 1979ல் ஒரு கிலோவுக்கு ரூ.2,000ஐ கடந்த வெள்ளி அதன் பிறகு பல முறை சரிந்துள்ளது. 2012ல் ரூ.57,315.87க்கு விற்கப்பட்ட வெள்ளியின் விலை, 2016ல் ரூ.36,318.10 ஆகக் குறைந்தது. அதன் பிறகே மெல்ல அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில் தான் வெள்ளியும் தங்கத்தை போலவே உச்சம் தொட்டது.

“தங்கம் வாங்க ஆளே இல்லை..” உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சு

தங்கம் vs வெள்ளி

1980களில் இருந்து இப்போது வரை உள்ள டேட்டாவை வைத்து பார்க்கும் போது வெள்ளியை விட தங்கம் தான் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தங்கம் சுமார் 76 மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் வெள்ளி சுமார் 55 மடங்கு வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

English summary

A ₹1,000 investment in gold in 1947 could have grown to around ₹17.1 lakh today(லாபத்தை அள்ளி கொடுக்கும் தங்கம்): Gold vs Silver Returns latest news in tamil.

Read More

Previous Post

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

Next Post

என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா? | Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins

Next Post
என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா? | Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins

என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா? | Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin