• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

18 வயதில் அறிமுக டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் காட்டிய திறமையும் தைரியமும்! | Pat Cummins proves skills on his Test cricket debut at the age of 18

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
18 வயதில் அறிமுக டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் காட்டிய திறமையும் தைரியமும்! | Pat Cummins proves skills on his Test cricket debut at the age of 18
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சச்சின் டெண்டுல்கரில் இருந்து தொடங்கியது கிரிக்கெட்டில் இந்த சிறுவயது சாகசங்கள். சச்சினுக்குப் பிறகுதான் வயதே புள்ளி விவரங்களில் ஒரு பகுதியாக அமையத் தொடங்கியது எனலாம். ஆனால், இதனை இந்திய ஊடகங்கள் இந்திய வீரர்களின் சிறுவயது சாகசங்களை மட்டுமே குறிப்பிடும் ஒரு குறுக்கல்வாதம் செய்ய மற்ற நாட்டின் சிறுவயது சாகசங்கள் இந்திய ரசிகர்களின் பார்வைக்கு வருவதேயில்லை. இன்று வரை இதுதான் நிலை.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை வெற்றிக் கேப்டன் பாட் கம்மின்ஸும் தன் 18 வயதில், அதுவும் தென் ஆப்பிரிக்கா என்னும் கடினமான பிரதேசத்தில் வலுவான அந்த அணிக்கு எதிராகச் செய்ததுதான் பெரிய விஷயம்.

2011-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் போட்டியில் சந்தித்த போது ஆஸ்திரேலியாவின் இப்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் டெஸ்ட் அரங்கிற்கு அறிமுகமானார். அது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்ற போது ஆஸ்திரேலியா 109 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 47 ரன்களுக்குச் சுருண்டு அவமானப்பட்டது. டெஸ்ட்டின் 3-ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு முன்னரே ஆஸ்திரேலியா கடும் உதை வாங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் அசாத்தியமான 151 ரன்களினால் 284 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஷேன் வாட்சன், ரியான் ஹாரிஸ் பந்து வீச்சில் 96 ரன்களுக்குச் சுருண்டது. பயங்கரமான பிட்ச். ஸ்விங், வேகம், எழுச்சி கண்ட பந்துகள் என்று மிகமிகக் கடினமான பிட்ச். 2-வது இன்னிங்ஸில் பிலாண்டர் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் இணைந்து 5 விக்கெட்டுகளை எடுக்க ஆஸ்திரேலியா 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு 236 ரன்கள். அதை கேப்டன் கிரேம் ஸ்மித் (101), ஹஷிம் ஆம்லா (112) சதங்கள் மூலம் 50 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

இந்நிலையில்தான் 2வது டெஸ்ட் தொடங்கியது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம். வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸுகுப் பதிலாக 18 வயது பாட் கம்மின்ஸ் அறிமுகமாகிறார். தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுக்கையில் பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அதுவும் அப்போதைய ஸ்டார் பேட்டர் ஹஷிம் ஆம்லாவின் விக்கெட்.

ஆஸ்திரேலியா இறங்கி வாட்சன், பிலிப் ஹியூஸ் தலா 88 ரன்களுடன் அற்புதத் தொடக்கம் கொடுக்க பிலாண்டர், ஸ்டெய்ன், மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆஸ்திரேலியா 296 ரன்களை எடுத்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா (101), ஏ.பி.டிவில்லியர்ஸ் (73) 147 ரன்களைச் சேர்த்து கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்காவை வெற்றிக்கு இட்டுச் செல்லுமாறு ஆடினர். அப்போது கம்மின்ஸ் வந்தார் டிவில்லியர்ஸை அற்புதமான ஒரு டிரைவ் ஆடும் சபலத்தைத் தூண்டி எட்ஜ் செய்ய வைத்து வீழ்த்தினார். ஆஷ்வெல் பிரின்ஸ் பாண்டிங்கின் பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார்.

கிரீசில் இருப்பது ஆம்லா, அப்போது கம்மின்ஸ் மிக அருமையாக ஆம்லா உடலுக்குக் குறுக்காக ஒரு பந்தை வீச ஆம்லா சதமெடுத்திருந்தாலும் சபலப்பட்டு அந்தப் பந்தைத் தொட்டார், கெட்டார். பெவிலியன் நோக்கி நடைபயின்றார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ருடால்ஃப் விக்கெட்டுடன் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு ஆக்ரோஷமாக வீசிய கம்மின்ஸ் வெர்னன் பிலாண்டர், டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோரையும் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவை 339 ரன்களுக்குச் சுருட்டினார். பாட் கமின்ஸ் 79 ரன்களுக்கு 6 விக்கெட். இது மேட்ச் வின்னிங் பவுலிங் என்பது அப்போது பாட் கம்மின்ஸுக்குத் தெரியாது.

ஆஸ்திரேலியா வெற்றி இலக்கு கடினமான பிட்சில் 310 ரன்கள். பிலிப் ஹியூஸும் ஷேன் வாட்சனும் சடுதியில் பிலாண்டரிடம் காலியாக ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், உஸ்மான் கவாஜா (65), ரிக்கி பாண்டிங் (62) நிலை நிறுத்தி ஸ்கோரை 114-க்குக் கொண்டு சென்றனர். இவர்கள் ஆட்டமிழக்க, மைக்கேல் கிளார்க்கும் 2 ரன்களில் பிலாண்டர் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் என்று ஆனது ஆஸ்திரேலியா, உதை உறுதி என்று தெரிந்தது.

ஆனால், மைக் ஹஸ்ஸி, 39, விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் 55, மிட்செல் ஜான்சன் 40 என்று தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் சவால் அளித்தாலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு இன்னும் 12 ரன்கள் தேவை என்று அந்த டெஸ்ட் போட்டி த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அறிமுக வீரர் கம்மின்ஸ் இறங்கினார். 15 பந்துகள் ஆடினார் அதில் மிக முக்கியமாக 2 பவுண்டரிகளை அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார். வாண்டரர்ஸ் மைதானத்தில் இதுதான் அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் ஸ்கோர். பாட் கம்மின்ஸின் அறிமுக டெஸ்ட் இப்படி வெற்றியில் அவரது கைவண்ணத்திலேயே அமைந்ததோடு தொடரையும் ஆஸ்திரேலியா சமன் செய்தது.



Read More

Previous Post

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மசோதாக்கள் மீது காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

Next Post

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

Next Post
அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin