ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம்.
அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் H என்ற எழுத்து வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரே ஒரு N மட்டும் உங்கள் பார்வைக்கு எளிதில் தெரியாமல் ஒளிந்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்கள் நேரம் சென்று கொண்டேயிருக்கிறது.
18 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
உங்கள் கண் பார்வை கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இன்னும் தெரியவில்லையா? சொன்ன நேரத்திற்குள் சரியான விடையை கண்டுபிடித்த நபர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களின் கண் பார்வை மிகவும் அற்புதமாக உள்ளது. பதில் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடிக்கலாம்.
வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். இந்தப் படத்தில் எல்லா இடத்திலும் H என்று இருந்தாலும், படத்தின் கீழிருந்து இரண்டாவது வரிசையில் இடது பக்கத்திலிருந்து கொஞ்சம் கூர்மையாக பாருங்கள். அதில் N என்ற ஒரேவொரு எழுத்து மட்டும் வித்தியாசமாக இருக்கிறது தெரிகிறதா?. இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை. இன்னும் உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?
பதில் தெரியாதவர்களுக்காக இந்தப் படத்தில் உள்ள வித்தியாசமான N எழுத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 18 நொடியில் கண்டுபிடித்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர் எனக் கூறப்படுகிறது. பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் அறிவுத்திறன் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய நவீன உலகில் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் எப்போதையும் விட மிகவும் அவசியமாகும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்களின் அவதானிப்பு திறனை கூர்மைப்படுத்துவதோடு அறிவுத்திறனையும் அதிகப்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…